(ஆதவன்)
யாழ். நீரிழிவுக் கழகமும், யாழ்.பல்கலைக்கழகக் கல்லூரியும் இணைந்து நடத்தும் நீரிழிவு சிகிச்சை முகாமும் விழிப்பூட்டல் செயலமர்வும் நாளைமறுதினம் சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் குருநகர் சென். ஜேம்ஸ் தேவாலயத்தில் நடைபெறவுள்ளன.
இதன்போது நீரிழிவுப் பரிசோதனை, இரத்த அழுத்தப் பரிசோ தனை, உடல் திணிவுச் சுட்டி கணித்தறிதல், பல்பரிசோதனை. புற்றுநோய் தொடர்பான விழிப்பூட்டல், நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மூலிகைகளும் பயன்பாடும், கண்பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள் என்பன இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.