புதியவன்.
நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரப் பணிமனை தெரிவித்துள்ளது.
அதண்டிப்படையில், நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதம் குறைந்தபட்சம் 16,975 ரூபா தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் பணிமனை குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.