புதியவன்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி மே மாதம் 26 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் 17 ஆவது சீசன் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணையை பி.சி.சி.ஐ. வெளியிட்டது. இதன்படி, மார்ச் 22 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை என 17 நாட்களுக்கான 21 போட்டிகள் கொண்ட விவரம் வெளியானது.
நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மீதமுள்ள அட்டவணையை பி.சி.சி.ஐ. இன்று வெளியிட்டது.
இதன்படி, நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி மே மாதம் 26 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதல் தகுதிச் சுற்றுப் போட்டிகள் அகமதாபாத்தில் முறையே மே 21, 22 ஆம் திகதிகளிலும் 2 ஆவது தகுதிச் சுற்றுப் போட்டி மே 24 ஆம் திகதி மற்றும் இறுதிப் போட்டி மே 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த இரு போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.