புதியவன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சுத் தெரிவு செய்ய லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் நிகோலஸ் பூரன் 45 ஓட்டங்களும், கே.எல். ராகுல் 39 ஓட்டங்களும், ஆயுஷ் பதோனி 29 ஓட்டங்களும் எடுத்தனர்.
கொல்கத்தா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, அண்ட்ரூ ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி லக்னோ அணியைக் கட்டுப்படுத்தினர்.
இதன்பின்னர், 162 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் அதிரடி ஆரம்பம் கொடுத்தார். அவருக்கு அணித் தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பான இணைப்பாட்டத்தைக் கொடுக்க எளிதில் இலக்கை துரத்தி வெற்றிபெற்றது கொல்கத்தா அணி. பில் சால்ட் 89 ஓட்டங்கள், ஸ்ரேயஸ் ஐயர் 38 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால், கொல்கத்தா அணி 15.4 பந்துப்பரிமாற்றங்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைக் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் மோசின் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.