புதியவன்
தற்போது நடைபெற்று வரும் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சி. எஸ்.கே. அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா, குஜராத் அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார்.
17 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 7 ஆவது லீக் ஆட்டத்தில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) - குஜராத் (ஜி.ரி.) அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் சி. எஸ். கே. அணி , 9 பந்துப்பரிமாற்றங்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ஓட்டங்களைக் குவித்துள்ளது. இதில் ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
6 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக அவர் வெறும் 20 பந்துகளை எதிர்கொண்டு 46 ஓட்டங்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (க)
0p8914
iamuyr
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.