புதியவன்
ஐ.பி.எல். 2024 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இதற்காக இரு அணி வீரர்களும் ஐதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்ட போது மும்பை அணி வீரர் ரோஹித் சர்மாவும் ஐதராபாத் அணி வீரர் மயங்க் அகர்வாலும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மயங்க அகர்வாலுக்கு ரோஹித் சர்மா பிளையிங் கிஸ் கொடுத்து கலாய்த்தார்.
எதற்காக ரோஹித் அப்படி செய்தார் என்றால், ஐ.பி.எல். தொடரின் 3 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ஐதராபாத் அணி வீரர் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா, அகர்வால் முகத்து முன்னாள் பிளையிங் கிஸ் கொடுத்து கேலி செய்வார். அதனை வைத்து ரோஹித் சர்மா, மயங்க் அகர்வாலை கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பான படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மயங்க் அகர்வாலை கிண்டல் செய்த ராணாவுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.(க)
d5aztz
2ytmy9
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.