15 ஓவரில் 200 ஓட்டங்களை குவித்தது எஸ். ஆர். எச்.
15 ஓவரில் 200 ஓட்டங்களை குவித்தது எஸ். ஆர். எச்.

ஐ. பி. எல். கிரிக்கெட் வரலாற்றில் இமாலய இலக்கை நோக்கி ஐதராபாத் அணி முன்னேறி வருகின்றது. மும்பை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியிலேயே அந்த அணி இதுவரை 14 பந்துப்பரிமாற்றங்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

ஐ.பி.எல். தொடரின் 8 ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி ஐதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. 

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் திராவிஷ் ஹெட் ஆகியோர் களமிறங்கினார். மயங்க் அகர்வால் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக், திராவிஷ் ஹெட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்கள் குவித்தது.

அதிரடியாக விளையாடிய திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரைச் சதம் விளாசினார்.

இதன்மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக வேக அரைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 

அடுத்த சிறிது நேரத்திலேயே இவரது சாதனையை இளம் வீரர் அபிஷேக் முறியடித்தார்.

அபிஷேக் 16 பந்தில் அரைச் சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக வேக அரைச் சதம் விளாசிய 3 ஆவது வீரரானார் அபிஷேக் . முதல் இடத்தில் ஜெய்ஸ்வாலும் (13 பந்தில்) 2 ஆவது இடத்தில் கே.எல். ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் (14 பந்தில்) உள்ளனர்.(க)

100 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.