புதியவன்
தற்போது நடைபெற்று வரும் போட்டியில் 278 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிவரும் மும்பை அணி இதுவரை 2 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் 8 ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகின்றன.
இந்தப் போட்டி ஐதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், திராவிஷ் ஹெட் ஆகியோர் களமிறங்கினார். மயங்க் அகர்வால் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக், திராவிஷ் ஹெட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரைச் சதம் விளாசினார்.
அவர் 24 பந்தில் 62 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம் ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் 16 பந்தில் அரைச் சதம் விளாசினார். அவர் 23 பந்தில் 63 ஓட்ட குவித்து ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து வந்த கிளாசனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 23 பந்தில் அரைச் சதம் விளாசினார்.
இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கள் மட்டும் இழந்து 277 ஓட்டங்கள் குவித்தது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.