புதியவன்
டிராவிஷ் ஹெட் 24 பந்துகளில் 62 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசன் 34 பந்துகளில் 80 ஓட்டங்களையும் குவித்தனர்.
பலமான மும்பை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற பெருமையை பெற்றதை அடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் (எஸ். ஆர். எச்.) அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கியுள்ளது. இதன்படி ஹென்ரிச் கிளாசனுக்கு தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்டது.
அளவில் பெரிதாகக் காட்சியளிக்கும் சங்கிலியின் விலை சுமார் 80 இலட்சம் ரூபா வரை இருக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.