புதியவன்
டில்லிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் ஆர். ஆர். 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதின.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற டில்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 185 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில், 186 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய டில்லி அணி, 20 பந்துப்பரிமாற்றங்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதனால், ஐ.பி.எல். 2024 இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தியது(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.