நிதிஷ் ரெட்டி அதிரடி! பஞ்சாப்புக்கு 183 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
நிதிஷ் ரெட்டி அதிரடி! பஞ்சாப்புக்கு 183 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

புதியவன்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. 

முதலில் துடுப்பெடுத்தாடிய எஸ். ஆர். எச். அணி, 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 182 ஓட்டங்கள் எடுத்தது. நிதிஷ் ரெட்டி 37 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார்.

பஞ்சாப் மாநிலத்தின் முலான்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்தனர். பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் வீசிய 4 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹெட் ஆட்டமிழந்தார். அதே பந்துப்பரிமாற்றத்தில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் மார்க்ரம் வெளியேறினார். அடுத்த பந்துப்பரிமாற்றத்தில் அபிஷேக் சர்மாவை வெளியேற்றினார் சாம் கரன்.

ராகுல் திரிபாதி 11 ஓட்டங்கள் மற்றும் கிளாசன் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.அவர்கள் இருவரையும் ஹர்ஷல் படேல் வெளியேற்றினார்.

6 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த நிதிஷ் ரெட்டி மற்றும் அப்துல் சமாத் இணைந்து 50 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

அர்ஷ்தீப் வீசிய 17 ஆவது ஓவரில் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்தனர். சமாத் 25 ரன்களும், நிதிஷ் 64 ரன்களும் எடுத்தனர். 

நிதிஷ் 5 சிக்ஸர்களை விளாசியிருந்தார். முதல் 18 பந்துகளில் 14 ஓட்டங்களும், அடுத்த 19 பந்துகளில் 50 ரன்களும் அவர் எடுத்தார். பாட் கம்மின்ஸை 3 ஓட்டங்களில் போல்ட் செய்தார் ரபாடா.

இருபது பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். 

ஷபாஸ் அகமது 14 ஓட்டங்கள் எடுத்திருந்தார். கடைசி பந்துப்பரிமாற்றத்தில் புவனேஷ்வர் குமார் 6 ஓட்டங்களில் வெளியேறினார். 

பஞ்சாப் அணி 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது. அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். முதல் பத்து ஓவரில் 66 ரன்களும், அடுத்த பத்து ஓவர்களில் 116 ரன்களும் எடுத்தது ஹைதராபாத் அணி. (க)

105 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.