நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!
(புதியவன்)
தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்ற தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாத்திரம் தற்போது ஆண்டுதோறும் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு 10 இலட்சம் ரூபாய் ஆகும்.
இந்த நிலையில் அந்த காப்புறுதித் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை குடும்ப உறுப்பினர்களுக்கும், காப்பீட்டுத் தொகையாக வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.