எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக கையடக்கத் தொலைபேசிச் சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுச்சின்னம் குறித்து அரசதலைவர் தீவிரமாகப் பரிசீலித்துவரும் நிலையில் அந்தப் பட்டியலில் கையடக்கத் தொலைபேசிச் சின்னம் முன்னிலையில் இருப்பதாக அறியமுடிகின்றது.
அமைச்சர் டிரான் அலஸின் கட்சியான ஐக்கிய மக்கள் கட்சியின் சின்னமே தொலைபேசிச் சின்னமாகும். அக்கட்சியின் ஆங்கிலப் பெயரின் சுருக்கம் (யூ. பி.பி.) என வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) என்ற விடயத்துடன் ஓரளவு ஒத்துப்போகின்றது. அத்துடன், நிலையான தொலைபேசி என்பது அந்தக் காலம், ஸ்மார்ட் போன் என்பதே இந்தக் காலம் எனக் கூறி, சஜித் அணிக்கு எதிராகப் பரப்புரை செய்யவும் இதனைப் பயன்படுத்தமுடியும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சின்னம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.