2023 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளார் பெயர்ப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட 'ஏ' பட்டியலும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களைக் கொண்ட 'பி' பட்டியலும் தற்போது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதிவரை மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூர் அதிகாரசபைகள், கிராம அலுவலர் அலுவலகங்கள் ஆகியவற்றில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்காளர் பெயர்ப்பட்டியலிலுள்ள பெயர்களை நீக்குவது, புதிதாகச் சேர்ப்பது அல்லது பெயர்கள் தொடர்பில் வேறு சந்தேகங்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.