க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பாடங்களில் தேர்ச்சி பெற்று மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் சேர். ஜோன் கொத்தலாவல இராணுவப் பல்கலைக்கழகத்தில் பணம் செலுத்தி மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சற் புள்ளி அடிப்படையில் மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்குத் தகுதி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. வருகிற கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர். ஜோன் கொத்தலாவல இராணுவப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம். இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.