புதியவன்.
போலியான குறுஞ்செய்திகள் தொடர்பில் மக்கள் வைப்பகம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
பண்டிகைக் காலத்தில் நீங்கள் பெற்ற அல்லது பெறவிருக்கும் ஒரு பொருளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் வகையில், உங்கள் தகவல் மற்றும் வைப்பக அட்டை விவரங்களை வழங்குமாறு ஒரு மோசடியான குறுஞ்செய்தி பரப்பப்படுகிறது.
எனவே, மக்கள் வைப்பக வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட விவரங்கள், வைப்பகக் கணக்கு விவரங்கள் மற்றும் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் விவரங்கள் அல்லது ஒரு முறை கடவு சொல்(ஓரிபி) ஆகிய எண்களை தெரியாத இணையத்தளங்களுக்கு அல்லது மூன்றாம் தரப்பினருக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச )
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.