புதியவன்.
எதிர்க்கட்சிதலைவர் நேற்றுத் தெரிவித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது சுகாதார அமைச்சின் அதிகாரியொருவரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளர்.
“முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும் சுகாதரா அமைச்சுக்கு சொந்தமான இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களை அமைச்சரின் குடும்ப உறவினர்கள் தற்போது வரை பயன்படுத்தி வருவதாக” குறித்த அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச அதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டால் அவருக்கான அனைத்து சலுகைகளும் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் ஆனால் முன்னாள் அமைச்சருக்கு ஏன் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதே உத்தியோகபூர்வ வாகனங்களில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.