இண்டைக்கு நாடு விட்டு நாடு பாய்ஞ்சு போய் பிரான்ஸில நடக்கிற விசயத்தைப்பற்றித்தான் பட்சி சொல்லப்போகுது. எங்களுக்கென்னத்துக்கு பிரான்ஸ் விசயங்கள் எண்டு சிலர் நினைக்கலாம். ஆனால் என்ன செய்யிறது அங்கையும் எங்கடையாக்கள் தானே நீக்கமற நிக்கினம். அப்ப சொல்லத்தானே வேணும். ஊர்வழிய குனிஞ்ச தலை நிமிராமல் இந்தப்பூனையும் பால்குடிக்குமோ எண்ட கணக்கில திரிஞ்ச பெடியள் கூட பிரான்ஸுக்குப் போனால், பால் மட்டுமில்ல பியரும் குடிக்கிற சிங்கங்களாக மாறிடுவினமாம். குடியும், அடிதடியும் அங்க ஒரு பொழுதுபோக்கு மாதிரி. இடைக்கிடையில் ஆக்களை வாகனங்களில தூக்கிறது. வாளால வெட்டுறது, காசு பிடுங்கிறது எண்டு கட்டப்பஞ்சாயத்துகளுக்கும், அதைச் செய்யவெண்டு இருக்கிற குரூப்புகளுக்கும் பிரான்ஸில பஞ்சமில்லை.
இப்பிடிக் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி எண்டு திரியிறவைக்கு அங்க பெரிசா வேலைவெட்டி இருக்கிறேலை. அவைக்கு 'சோசல் காசு'வரும். வேலையில்லாம இருக்கிறவைக்கு அரசாங்கம் குடுக்கிற உதவித்தொகைக்குப் பேர்தான் 'சோசல் காசு'. அந்தச் 'சோசல் காசில' உடம்பை வளர்த்து கொண்டுதான் இப்பிடியெல்லாம் சிலர் விளையாட்டுக் காட்டுகினம். சரி, உந்தக் கிலிசைகெட்ட வேலை யெல்லாத்தையும் பிரான்ஸோடஅவையள் நிப்பாட்டு றேலை.தங்கட கிளையளை யாழ்ப்பாணத்திலையும் திறந்து 'நாங்கள் தான் கெத்து' எண்டு தங்கட எதிர்க்குரூப்புக்கு முன்னால கொலரைத் தூக்கிவிடுற விளையாட்டிலையும் இவையள் இறங்கி இருக்கினம். யாழ்ப்பாணத்தில் திரியிற வாள்வெட்டுக் கும்பல்களுக்குப் பின்னால அநேகமா ஏதும் ஒரு பிரான்ஸ் குரூப் இருக்கத்தான் செய்யும். அங்கையிருந்து எங்கையெங்க அடிதடிப்படோணும்? எப்ப பெற்றோல் குண்டு எறியோணும்? எண்டெல்லாம் ஓர்டர் வேலை எடுத்திட்டு, யாழ்ப்பாணத்தில உள்ள தங்கட கிளைக்கு பிரான்ஸில உள்ளவை அறிவிப்பினம். ஊரில இருக்கிறவையும் பிரான்ஸ்காரர் சொன்னமாதிரி கடையை எரிச்சோ, வீட்டுக்கு பெற்றோல் குண்டு அடிச்சோ, வாளால வெட்டியோ தங்கட வீரதீரத்தைக் கும்பலாக் காட்டுவினம். மறக் காமல் இப்பிடியான 'சரித்திரச் சாதனையள்' அழியக்கூடாது எண்டு நினைச்சோ என்னவோ உதுகளை அவையள் போன்ல வீடியோவும் எடுத்து வைச்சிருப்பினம். அந்த வீடியோவை பிரான்ஸுக்கு அனுப்பினாத்தான் "ஓர்டர்" குடுத்தவர் வேலைக்கு காசு குடுப்பார். 'சர்ப்பிரைஸ் கிப்ட்' குடுக்கிறதை விட இப்பிடி வெளிநாட்டு ஓர்டர் எடுத்து, அடிதடி செய்யிறதுதான் இப்ப உழைப்புக்கூடின வேலை.
இப்பிடியெல்லாம் பிரான்ஸில கூத்தடிச்சகும் பல்களுக்கு அங்கத்தை அரசாங்கம் ஆப்பு வைச்சிருக்கு. எவ்வளவு நாளைக்குத்தான் அங்கத்தை அரசாங்கமும் பொறுமையாப் பார்த்துக்கொண்டிருக்க ஏலும்? ஒரு கிழமையா அங்க கடும் பொலிஸ் வேட்டை. கட்டாக்காலியளைக் கலைச்சுப் பிடிக்கிற மாதிரி எங்கட யாழ்ப்பாணத்துப் பெடியள் அம்பது பேரை துரத்தித் துரத்திப் பிடிச்சு ஜெயிலுக்குள்ள போட்டிருக்கினமாம். இன்னும் கனபேரைத் தேடி ரவுண்டப்புகளும் நடக்குதாம். 'இதோட இவையள் திருந்தோணும், இல்லாட்டி பிடிச்சு நாடுகடத்திப்போடு வினம்' எண்ட பயம் பிரான்ஸில அடிதடி செய்யிற எங்கட பெடியளுக்கு வருமட்டும், வாள்வெட்டும் கட்டப்பஞ்சாயத்தும் அங்க தொடரத்தான் போகுது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.