17 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 7 ஆவது லீக் ஆட்டத்தில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) - குஜராத் (ஜி.ரி.) அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.
இதில் நாணயச்சுழற்சியில் வெற்ற குஜராத் அணியின் தலைவர் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணி தனது ஆரம்ப லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதேபோல் குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வெற்றிபெற்றுள்ளன.
தசைப்பிடிப்பு காயத்திலிருந்து மீண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பத்திரண சென்னை அணியினருடன் இணைந்திருக்கிறார். அவர் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.(க)
w72rnu
3ejpir
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.