(புதியவன்)
தனஞ்சய டி சில்வா இலங்கையில் மாத்திரமன்றி உலக துடுப்பாட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு வீரர்.
மேலும், தனஞ்சய மிகவும் அன்பான ஒரு வீரர் என்பதை அவர் நிரூபிக்கத் தவறியதில்லை.
இவ்வாறு, தனஞ்சய டி சில்வா செய்த ஒரு அன்பான விடயத்தால் உண்மையிலேயே அவரது ரசிகை ஒருவர் ஆச்சரியமடைந்துள்ளார்.
விசேட நிகழ்வுகளுக்காக வழங்கப்படும் பரிசுகளை ஏற்பாடு செய்யுமாறு தனஞ்சய டி சில்வா குறித்த ரசிகையிடம் ஆர்டர் செய்துள்ளார்.
கிரிக்கெட்டில் அவரைப் பார்த்து ரசித்த அந்த ரசிகை , தனஞ்சயவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆர்டரை தான் டெலிவரி செய்யப் போகிறேன் என்று கடைசி நிமிடம் வரை அறிந்திருக்கவில்லை.
அவரும் அதைத் தெரிவிக்கவில்லை.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.