கிழக்கு மாகாணம் செய்திகள்

அரபுக் கல்லூரிக்கு தளபாடங்கள் கையளிப்பு

இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஓட்டமாவடி சிராஜியா அரபுக் கல்லூரி மாணவர் விடுதிக்கான தளபாடம் வழங்கும் நிகழ்வு இன்று (09) இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் தாஹிர் மௌலவி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர் எம்.எப்.ஜௌபர், கோறளைப்பற்று மத்தி சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டாரக் குழு தலைவர் எஸ்.சமீம், இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.றிஸ்மின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாணவர் விடுதிக்கான இருபது கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு சிராஜியா அரபுக் கல்லூரி மாணவர் விடுதியின் குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் பற்றி இராஜாங்க அமைச்சரினால் கல்லூரி நிருவாகத்தினருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது. (கு)

Related posts

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகினர் ரயில்வே ஊழியர்கள்

G. Pragas

நான்கு பந்தில் உலக சாதனை படைத்தார் மாலிங்க

G. Pragas

பயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு

G. Pragas

Leave a Comment