செய்திகள்

கோத்தாவின் மனுவை விசாரணைக்கு எடுக்க உத்தரவு!

அவன்த் கார்ட் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள முறை தவறானது என்பதனால் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவு சட்டவிரோதமானது என தெரிவித்து கோத்தாபய ராஜபக்ச முன்வைத்த மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.

அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவன்த்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 11.4 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தான் உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அஜித் புதிய படம் பற்றி புதுத் தகவல்

G. Pragas

மாணவர்களது கல்வி முன்னேற்றத்தில் பெற்றோர்கள் கைகோர்க்க வேண்டும்

G. Pragas

உணர்வெழுச்சியுடன் தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்பம்

G. Pragas

Leave a Comment