உலகச் செய்திகள் சினிமா

பொது வெளியில் மொட்டை அடித்த எதிர்க் கட்சித் தலைவர்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு அங்கமாக, தனது தலையை மொட்டையடித்த சமீபத்திய அரசியல்வாதியாக, தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் பதிவாகியுள்ளார்.

நேற்றுமாலை தென்கொரிய ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், அந்நாட்டு எதிர்க் கட்சித் தலைவர் ஹவாங் கியோ அஹ்ன் தனது தலைமுடியை முழுவதுமாக மொட்டையடித்துக் கொண்டார்.

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அந்நாட்டின், புதிய நீதியமைச்சர் சோ குக்கினை எதிர்த்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதே நோக்கத்திற்காக தலையை மொட்டையடித்துக்கொண்டனர்.

இவர்கள் மூவரும் பழமைவாத கட்சியை சேர்ந்தவர்கள் என்பதோடு, ஜனாதிபதி மூன் ஜே-இன் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை எதிர்க்கின்றனர். சோ குக் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முன்னாள் சட்ட பேராசிரியரும், மூனின் உதவியாளருமான சோ குக் கடந்த வாரம் நீதி அமைச்சராக பதவியேற்றார். குக்கிற்கும், அவரது குடும்பத்திற்கும் எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளபோதிலும், அதுத் தொடர்பில் அவதானம் செலுத்தாத, அந்நாட்டு ஜனாதிபதி அவரை நீதியமைச்சராக நியமித்துள்ளமை கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

குக்கின் மனைவியும், ஒரு பேராசிரியர் என்பதோடு, தமது புதல்வி பல்கலைக்கழகத்தில் சேரவும் புலமைப்பரிசிலை பெற்றுக்கொள்ளவும், மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீளவும் ஒத்திவைப்பு

G. Pragas

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

G. Pragas

கோச்சராக மாறினார் தமன்னா

G. Pragas

Leave a Comment