செய்திகள் பிந்திய செய்திகள் முல்லைத்தீவு

இரணைதீவிற்கு படகு சேவை ஆரம்பிக்கப்பட்டது

இரணைதீவிற்கான படகு சேவை நேற்று (11) பூநகரி பிரதேச செயலாளரால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு சேவை தற்போது விசேட தேவைகள் மற்றும் விசேட நிகழ்வுகளிற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இரணைமாதா கடற்தொழிலாளர் சங்கத்தின் முயற்சியினால் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள குறித்த படகில் 50இற்கும் மேற்பட்டவர்கள் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.

அத்துடன் இந்த படகு சேவைக்கான அனுமதிகள் பெறப்படாத நிலையில் அதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரணைமாதா கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இரணைமாதா நகரிலிருந்து இரணைதீவிற்கு குறித்த படகு சேவை உத்தியோகபூர்வமாக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இனவாதம் கக்கும் சிங்கள ஊடகங்கள்; ரஞ்சன் கண்டனம்

G. Pragas

கடத்தல் வழக்கில் அட்மிரல் ஒப் த ப்லேட் வசந்தவிடம் மீண்டும் விசாரணை!

G. Pragas

மேலதிக வகுப்புக்களுக்கு செல்லாத மாணவனுக்கு 197 புள்ளிகள்

G. Pragas

Leave a Comment